Tips and Tricks



மருத்துவ டிப்ஸ்   
                                                                                                                                      









  • ·      உணவுக்கு பின் தண்ணீரில் சிறிது கருப்பட்டியை கரைத்து குடிக்கவும்.    இதனால் வயிற்றில் அமிலம் சுரப்பு  குறையும் 

  • ·   துளசி இலைகள் போடப்பட்ட நீரை தினமும் குடித்து குடித்து வந்தால் தொண்டைப் புண் ஏற்படாது.

  • ·      ¼ தே.க கரு மிளகுத்தூள் 3 தே.க எலுமிச்சை சாறு; ஒரு கோப்பை நீரில் ரு தே.க தேன் இந்த கலவையை  3-4 மாதங்கள் தொடர்ந்து எடுத்துக் கொண்டு வந்தால் உடல் எடை குறையும்.

  • · காலை உணவிற்கு முன் தினமும் ஒரு தக்காளி சாப்பிட்டு வர வேண்டும்.ஒரு 3-4 மாதங்களுக்கு இதைச்    செய்தால் உடல் எடை குறையும்.

  • ·   தினமும் காலையில் முழுதாக வளர்ந்த 10-12 கறிவேப்பிலை சாப்பிட்டு வந்தால் 3-4 மாதங்களில் உடல்      எடை குறையும்.

  • ·      அரிசி உருளை கிழங்கு போன்ற மாவு சத்து பொருட்களை குறைக்கவும். அதற்கு பதிலாக கோதுமை    எடுத்துக் கொள்ளவும்.

  • ·  கடுமையான இருமல் இருந்தால் 3கப் தண்ணீருடன் வெற்றிலையும் மிளகையும் போட்டு கொதிக்க வைத்து  குடித்து வரவும்.

  • ·        சருமத்திலுள்ள சிறு தழும்புகளைப் போக்குவதற்கு குளிக்கும் நீரில் துளசி இலைகளை போட்டு குளிக்கவும்.  விரைவில் தழும்புகள் குறையும்.


  •  வெங்காயத்தில் புரதச் சத்து; உப்புகள்; விற்றமின்கள் ஆகிய சத்துக்கள்அடங்கியுள்ளன. ஆகவே அவற்றை    உணவில் அதிகளவு எடுத்துக் கொள்ளவும்.



                                                             சமையல் டிப்ஸ்



         

  • · சப்பாத்தி மா பிசைவதற்கு முன்னால் கையில் சிறிதளவு உப்பைத் தடவி கொண்டால்கையில் சப்பாத்தி மா ஒட்டாது.
  • ·  உருளக்கிழங்கு வேக வைத்த தண்ணீரில் பாத்திரங்களை கழுவினால் பாத்திரங்கள்  பளபளப்பாக இருக்கும்.
  • ·    அரிசி மற்றும் காய்கறிகள் கழுவிய தண்ணீரை வீணாக்காமல்       செடிகளுக்கு இட்டால்  செடிகள் செழிப்பாக வளரும்.
  • ·   காய்ந்த மிளகாயை வறுக்கும் போது நெடி வரும். அவை வராமல்  இருப்பதற்கு சிறிது  உப்பு போட்டு வறுத்தால் நெடி வராத.
  • ·   ரவை; கோதுமை மா உள்ள டப்பாவில் பூச்சி; புழுக்கள் வராமல்    இருப்பதற்கு கொஞ்சம்  வசம்பை தட்டிப் போட்டால் பூச்சி; புழுக்கள் வராது.
  • ·   காய்கறிகளை வேகவைக்கும் போது அதிக தண்ணீர் வைத்து வேக வைக்க கூடாது. ஏன்  என்றால் காய்கறிகளின் உள்ள விற்றமின் சத்துக்கள் போய்விடும். அதில் உள்ள  மணமும் போய்விடும்.
  • ·      தயிர் நீண்ட நேரம் புளிக்காமல் இருக்க இஞ்சியின் தோலை சீவி    கொஞ்சம் தட்டி      தயிரில்போட்டால் புளிக்கவே புளிக்காது.
.

                            மூலிகைகள்                                                                                                                   
                                              



                            
 
                        மூலிகைப்   பூக்கள்














No comments:

Post a Comment